இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 27-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி. அணியைத் தோற்கடித்தது.

கோவா மாநிலம் ஃபட்ரோடாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

பின்னர் நடைபெர்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 60-ஆவது நிமிடத்தில் புருனோ பெலிசாரிக்குப் பதிலாக மார்செலோவை களமிறக்கியது டெல்லி அணி. அதற்கு 72-ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. சேன்டானா கொடுத்த கிராஸில் மார்செலோ கோலடித்தார்.

இதன்பிறகு உத்வேகம் பெற்ற டெல்லி அணி 76-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோலை அடித்தது. மார்செலோ கொடுத்த கிராûஸப் பயன்படுத்தி ரிச்சர்ட் காட்úஸ இந்த கோலை அடித்தார். இதன்பிறகு கோல் எதுவும் விழாத நிலையில், டெல்லி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இந்த வெற்றியின் மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்ற டெல்லி அணி 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கோவா அணி 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டம் எதுவும் இல்லை. புதன்கிழமை நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.