Germany - Colombia teams clash on 16th on the coming ...

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் ஜெர்மனி - கொலம்பியா அணிகள் மோதும் ஆட்டம் வரும் 16-ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. 

கொச்சியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் கினியாவை தோற்கடித்தது.

ஜெர்மனி தரப்பில் ஜான் ஆர்ப் 8-வது நிமிடத்திலும், நிகோலஸ் குயேன் 62-வது நிமிடத்திலும், சஹ்வெர்டி செடின் 92-வது நிமிடத்திலும் கோலடித்தனர்.

இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெற்றதன்மூலம் இரண்டாவது வெற்றியைப் பெற்ற ஜெர்மனி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கும் தகுதி பெற்றது.

மர்கோவாவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஈரான் 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகாவை வீழ்த்தியது. இதன்மூலம் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி கண்ட ஈரான் அணி, 9 புள்ளிகளுடன் "சி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.

வரும் 16-ஆம் தேதி டெல்லியில் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் ஜெர்மனி - கொலம்பியா அணிகள் மோத இருக்கின்றன.