gayle speaks about bowlers

யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் அதிரடி வீரர் கெய்லை மிரட்டியது எந்த பவுலர் என்பது தொடர்பாக கெய்லே கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் கிறிஸ் கெய்ல். ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள், அதிகபட்ச ஸ்கோர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான கெய்லை, ஐபிஎல் 11வது சீசனுக்கான ஏலத்தில் எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை.

அவர் ஆடிவந்த பெங்களூரு அணி, அவரை தக்கவைக்க விரும்பவில்லை. மற்ற அணிகளும் அவரை அடிப்படை விலைக்கு கூட எடுக்க முன்வரவில்லை. இரண்டாவது ஏலத்திலும் எடுக்கவில்லை. மூன்றாவது ஏலத்தில் சேவாக் ஆலோசகராக உள்ள பஞ்சாப் அணி அவரை எடுத்தது. 

இதனால் கடும் அதிருப்தியில் இருந்த கெய்ல், பெங்களூரு அணி தன்னை தக்கவைப்பதாக கூறி ஏமாற்றிவிட்டதாக வெளிப்படையாகவே தெரிவித்தார். எனினும் இந்த சீசனில் தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய கெய்ல், இரண்டாவது பாதியில் சரியாக ஆடவில்லை.

பஞ்சாப் அணியும் பிளே ஆஃபிற்கு தகுதி பெறாமல் வெளியேறியது. சியட் ரேட்டிங் விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன. அதில், பாப்புலர் தேர்வு என்ற பிரிவில் கெய்லுக்கு விருது வழங்கப்பட்டது. 

பவுலர்களை பயமுறுத்தும் வகையில் அதிரடியாக பேட்டிங் ஆடக்கூடியவர் கெய்ல். அவர் அளித்த ஒரு பேட்டியில், எந்த பவுலரை கண்டால் உங்களுக்கு கொஞ்சம் பயம்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கெய்ல், எந்த பவுலரை பார்த்தும் எனக்கு பயமில்லை. என்னை கண்டால் தான் பவுலர்களுக்கு பயம் என பதிலளித்தார்.