இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த கங்குலி, ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.  

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த கங்குலி, ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், இந்திய அணியின் நட்சத்திர பவுலராக வலம்வந்தவர். 2000ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டுவரை இந்திய அணிக்காக ஆடினார். 2003, 2007, 2011 ஆகிய மூன்று உலக கோப்பைகளில் இந்திய அணிக்காக ஆடினார். 

2003ம் ஆண்டு உலக கோப்பையில் கங்குலி தலைமையிலான இந்திய அணி இறுதி போட்டிவரை சென்று இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவி கோப்பையை நழுவவிட்டது. அந்த அணியில் ஜாகீர் கான் இடம்பெற்றிருந்தார். அந்த தொடர் முழுவதும் அபாரமாக பந்துவீசினார் ஜாகீர் கான். அதேபோல தோனி தலைமையிலான இந்திய அணி 2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்றபோது அந்த அணியிலும் ஜாகீர் கான் இடம்பெற்றிருந்தார். 

ஜாகீர் கான் இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 311 விக்கெட்டுகளையும் 200 ஒருநாள் போட்டிகளில் ஆடி 282 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

கங்குலி தலைமையிலான அணியில் கங்குலியால் வளர்த்தெடுக்கப்பட்ட வீரர்களான சேவாக், ஹர்பஜன், யுவராஜ் ஆகியோரில் ஜாகீர் கானும் ஒருவர். நேற்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிய ஜாகீர் கானுக்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். 

ஜாகீர் கானுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த கங்குலி, உடல் எடையை குறைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 

Scroll to load tweet…

இதேபோல, சேவாக், ஹர்பஜன், ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் டுவிட்டரில் ஜாகீர் கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…