ganguly disappoints for rayudu elected for england series instead of rahane

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் ரஹானே இடம்பெறாததற்கு கங்குலி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

முழுநேர டெஸ்ட் அணி அந்தஸ்து பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, ஜூன் 14ம் தேதி, முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் ஆடுகிறது. அந்த நேரத்தில் இங்கிலாந்தில் கவுண்டி போட்டியில் கோலி ஆடுவதால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் ரஹானேவை தேர்வு செய்யாதது மிகவும் கடுமையான முடிவு. நான் ரஹானேவைத்தான் தேர்வு செய்வேன். இங்கிலாந்தில் ரஹானே நன்றாக ஆடுவார். அவரால் ஆதிக்கம் செலுத்த முடியும். இங்கிலாந்தில் ரஹானே நல்ல ரெக்கார்டுகளையும் வைத்துள்ளார் என கங்குலி தெரிவித்தார்.