French Open Tennis World First rank player advanced

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் அமெரிக்காவின் அலிசான் ரிஸ்கேவை எதிர்கொண்ட சைமோனா, 2-6, 6-1, 6-1 என்ற செட்களில் வெற்றி பெற்றார். அதன்படி அவர் இரண்டாவது சுற்றுக்கு அசத்தலாக முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-3, 6-4 என்ற செட்களில் செர்பியாவின் விக்டோரியா குஸ்மோவாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

அதேபோன்று போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா தனது 2-வது சுற்றில் 6-0, 6-4 என்ற செட்களில் ஸ்பெயினின் லாரா அருவாபரினாவை வீழ்த்தினார். 

மற்றொரு 2-வது சுற்றுகளில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-4, 6-1 என்ற செட்களில் சக நாட்டவரான கரோலின் டோல்ஹைடை வென்றார்.

ஜப்பானின் நஜோமி ஒசாகா 6-4, 7-5 என்ற செட்களில் கஜகஸ்தானின் ஸரினா டியாஸை வீழ்த்தினார். 

போட்டித் தரவரிசையில் 26-வது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் பார்பரா ஸ்டிரைக்கோவா 6-4, 6-2 என்ற செட்களில் ரஷியாவின் எகாடெரினா மகரோவாவை வீழ்த்தினார்.