French Open Tennis Williams Sisters Wild Card Entry ...

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா - வினஸ் வில்லியம்ஸ் சகோதரிகளுக்கு வைல்ட் கார்டு வழங்கப்பட்டு உள்ளது.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் வில்லியம்ஸ் சகோதரிகளான செரீனா - வினஸ் வில்லியம்ஸ் விளையாட நேரடி நுழைவு அனுமதி தரப்பட்டுள்ளது. 

இருவரும் கடந்த 1999, 2010-ல் பிரெஞ்ச் ஓபன் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளனர். இருவரும் இணைந்து இரட்டையர் பிரிவில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். 

கடந்த 2017-ஆம் ஆண்டு கர்ப்பம் தரித்த செரீனா போட்டிகளில் கலந்து கொள்வதை நிறுத்தியிருந்தார். 

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ஒற்றையர் பிரிவில் செரீனா மீண்டும் கலந்து கொள்ள விழைந்துள்ளார்.