French Open Tennis Those who took the next round ...
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால், மிலோஸ் ரயோனிச், கார்பைன் முகுருஸா உள்ளிட்டோர் அபாரமாக ஆடி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது,.
இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் மூன்றாவது சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஜார்ஜியாவின் நிகோலஸ் பாஸிலாஸ்விலியுடன் மோதினார்.
இதில் 6-0, 6-1, 6-0 என்ற நேர் செட்களில் நிகோலஸை வீழ்த்தி நடால் வெற்றி கண்டார்.
இன்னொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டா மற்றும் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவுடன் மோதியதில் 7-5, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் கரீனோ வெற்றிப் பெற்றார்.
மகளிர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர், அமெரிக்காவின் பெத்தானி மடேக் சேன்ட்ஸ் மோதிய ஆட்டத்தில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் சமந்தா வென்றார்.
கார்பைன் முகுருஸா 7-5, 6-2 என்ற நேர் செட்களில் கஜகஸ்தானின் யூலியா புதின்சேவாவையும் வீழ்த்தினார்.
பிரான்ஸின் கிறிஸ்டினா மெடினோவிச் 7-5, 4-6, 8-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸை வீழ்த்தினார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண் - பூரவ் ராஜா இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் ஆலிவர் மராச் - குரோஷியாவின் மட் பாவிச் ஜோடிக்கு தோல்வியளித்ததது.
வெற்றிப் பெற்ற அனைவரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
