French Open Tennis Those who advanced in the third round
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடால், ஜோகோவிச், முகுருஸா, வில்லியம்ஸ், சமந்தா, கரோலின் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தினர்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் நேற்றைய ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்று ஆட்டங்களில் ஸ்பெயினி நடால் மற்றும் நெதர்லாந்தின் ராபின் ஹேஸி மோதினர்.
இதில் 6-1, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் நடால் வெற்றி பெற்றார்.
அதேபோன்று செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் போர்ச்சுகலின் ஜோ செளசா மோதிய ஆட்டத்தில் 6-1, 6-4, 6-3 என்ற நேர் ஜோகோவிச் வென்றார்.
மகளிர் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் கார்பைன் முகுருஸா, எஸ்தோனியாவின் அனெட் கொன்டாவீட்டுடன் மோதி 6-7 (4), 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
அதேபோன்று அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஜப்பானின் குருமி நராவை 6-3, 6-1 என்ற நேர் செட்களில் நராவையும் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் மற்றும் பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் பிளிப்கென்ஸ் மோதியதில் 6-2, 7-6 (6) என்ற நேர் செட்களில் கிர்ஸ்டன் தோல்வியைத் தழுவினார்.
டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியுடன் மோதிய கனடாவின் பிரான்காய்ஸ் அபன்டா 6-0, 6-0 என்ற நேர் செட்களில் வீழ்ந்தார்.
வெற்றிப் பெற்ற நடால், ஜோகோவிச், முகுருஸா, வில்லியம்ஸ், சமந்தா, கரோலின் ஆகியோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தினர்.
