French Open Badminton Tournament begins today
பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் இன்று தொடங்குகிறது.
இந்த போட்டியில் சமீபத்தில் டென்மார்க் ஓபன் பட்டம் வென்ற ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ்.பிரணாய், பி.காஷ்யப், சாய்னா நெவால், பி.விசிந்து, மானு அத்ரி - சுமீத் ரெட்டி, அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி, பிரணவ் ஜெர்ரி சோப்ரா உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் இங்கிலாந்தின் ராஜீவ் ஒசெப்பை சந்திக்கிறார். அதில் வெற்றி பெறும் பட்சத்தில் 2-ஆவது சுற்றில் ஹாங்காங்கின் வாங் விங் கி வின்சென்டை சந்திக்க வாய்ப்புள்ளது.
ஹெச்.எஸ்.பிரணாய் தனது முதல் சுற்றில் தென் கொரியாவின் லி ஹியூனை எதிர்கொள்கிறார்.
பி.காஷ்யப் தனது முதல் தகுதிச்சுற்றில் ஜெர்மனியின் ஃபாபியான் ரோத்தை சந்திக்கிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் ஸ்பெயினின் பீட்ரிஸ் காரெல்ûஸ எதிர்கொள்கிறார். சிந்து முன்னேறிச் செல்லும் பட்சத்தில் தனது காலிறுதியில், சீனாவின் செங் யுஃபெயுடன் மோதுவார்.
சாய்னா தனது முதல் சுற்றில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோரை எதிர்கொள்கிறார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணயும், சாத்விக்சாய்ராஜ் - சிரக் ஷெட்டி இணையும் களம் காணுகின்றன.
மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை தடம் பதிக்கிறது.
கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா – சிக்கி ரெட்டி இணை விளையாடுகிறது.
