நடக்ககூட முடியல; கிரிக்கெட்டில் சச்சினின் ஜிகிரி தோஸ்தாக இருந்த வினோத் காம்ப்ளியா இது? ஷாக்கிங் வீடியோ
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி நடக்க கூட முடியாமல் தத்தளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் வினோத் காம்ப்ளி. இவரும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். இவர் இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளிலும் 104 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள வினோத் காம்ப்ளி, அதில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். ஒரு போட்டியில் அதிகபட்சமாக 262 ரன்களும் எடுத்திருக்கிறார் வினோத் காம்ப்ளி.
தற்போது வினோத் காம்ப்ளிக்கு 25 வயது ஆகிறது. இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின்னர் அதில் இருந்து மீண்டார். இதைத்தொடர்ந்து அடிக்கடி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வினோத் காம்ப்ளி தற்போது நடக்க கூட முடியாத நிலையில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். அவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... Paris 2024:கடைசியில் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி – பேட்மிண்டனில் ஒரு பதக்கம் கூட இல்லாமல் வெளியேறிய இந்தியா!
அந்த வீடியோவில் நிற்க முடியாததால் பைக்கின் மீது சாய்ந்தபடி இருக்கும் அவரை சிலர் தாங்கிப் பிடித்தபடி அழைத்து செல்லும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதைப்பார்த்த ரசிகர்கள் வினோத் காம்ப்ளியின் நிலையை பார்த்து வேதனை தெரிவித்து வருகின்றனர். வினோத் காம்ப்ளிக்கு சச்சின் டெண்டுல்கர் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... கையில் காயம் – வலியோடு விளையாடி தோல்வி அடைந்த மல்யுத்த வீராங்கனை நிஷா தஹியா – கண்ணீர்விட்டு அழுத காட்சி!