கையில் காயம் – வலியோடு விளையாடி தோல்வி அடைந்த மல்யுத்த வீராங்கனை நிஷா தஹியா – கண்ணீர்விட்டு அழுத காட்சி!
பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் 10ஆவது நாளான இன்று நடைபெற்ற மகளிருக்கான ப்ரீஸ்டைல் 68 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை நிஷா தஹியா காலிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறினார்.
Nisha Dahiya, Paris 2024 Olympics
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் பிரம்மாண்டமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடக்க விழாவுடன் தொடங்கிய இந்த ஒலிம்பிக்ஸ் 2024 திருவிழாவில் இந்தியா இதுவரையில் 3 வெண்கலப் பதக்கத்தை மட்டுமே கைப்பற்றியுள்ளது. அதுவும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.
Paris Olympics 2024, Nisha Dahiya Injured
மேலும், நீச்சல், குதிரையேற்றம், ரோவிங், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன் என்று அனைத்திலும் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது. இந்த நிலையில் தான் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் 10ஆவது நாளான இன்று மகளிருக்கான மல்யுத்த போட்டி நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய மல்யுத்த போட்டியில் ப்ரீஸ்டைல் 68 கிலோ பிரிவில் தகுதிச் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனையான நிஷா தஹியா உக்ரைன் நாட்டைச் சேர்ந்த டெட்டியானா ரிஷ்கோவை எதிர்கொண்டார்.
Nisha Dahiya Womens Wrestling Freestyle 68kg
இதில் நிஷா தஹியா 6-4 என்று வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதைத் தொடர்ந்து இரவு 7.50 மணிக்கு நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் நிஷா தஹியா வட கொரியா நாட்டைச் சேர்ந்த பாக் சொல் கம் உடன் மோதினார். இதில், 8-1 என்று முன்னிலை வகித்த தஹியா கையில் காயம் அடைந்தார்.
Nisha Dahiya, Paris 2024 Olympics
இதனால் வலியால் துடித்த தஹியாவைப் பார்த்து எதிரணி வீராங்கனை கூட கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இதையடுத்து மருத்துவர் வந்து தஹியாவை கையை பரிசோதனை செய்து கையில் பேண்டேஜ் ஒட்டியுள்ளார். தொடர்ந்து அவரால் விளையாட முடியவில்லை. அதன் பிறகு அபாரமாக விளையாடிய பாக் சொல் கம் 10-8 என்று வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
Paris 2024 Olympics
இந்த போட்டியில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து தஹியா கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.