Former American soldier Andrei Agassi becomes coach of Jokovic in French Open

பிரெஞ்சு ஓபனின்போது உலகின் 2-ஆம் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு, முன்னாள் அமெரிக்க வீரர் ஆன்ட்ரே அகஸ்ஸி பயிற்சியளிக்க இருக்கிறார்.

எட்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான அகஸ்ஸி, 2006-ல் சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார்.

ரோம் மாஸ்டர்ஸ் போட்டி இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் தோற்றார் ஜோகோவிச்.

அந்த தோல்விக்கு பிறகு அவர் கூறியது:

“நான் மதிக்கக்கூடியவர்களில் அகஸ்ஸியும் ஒருவர். அவர், எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், டென்னிஸ் வாழ்க்கையிலும் பங்களிப்பு செய்யக் கூடியவர். பயிற்சியளிப்பது தொடர்பாக அகஸ்ஸியிடம் கடந்த சில வாரங்களாக பேசி வருகிறேன்.

பிரெஞ்சு ஓபனின்போது அவர் பயிற்சியளிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நாள்கள் தொடர முடியாது என தெரிவித்துள்ளார்” என்று அவர் கூறினார்.