Foreign coach appointed for first time for Indian boxers

இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு பிரான்ஸைச் சேர்ந்த ஸ்டீபன் கோட்டாலோர்டா என்ற வெளிநாட்டுப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இது முதல்முறையாகும்.

இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக குருபாக்ஸ் சிங் சாந்து நீண்டகாலமாக செயல்பட்டு வந்தார்.

தற்போது இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கு பிரான்ஸைச் சேர்ந்த ஸ்டீபன் கோட்டாலோர்டா என்ற அந்த பயிற்சியாளர் இந்திய மகளிர் அணிக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கவுள்ளார்.

இவர், வரும் ஜூன் முதல் வாரத்தில் பொறுப்பேற்கவுள்ளார்.

இதேபோல, இத்தாலியின் ரஃபேல் பெர்கமாஸ்கோ இளம் வீராங்கனைகளுக்கான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வியத்நாமில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியே புதிய பயிற்சியாளர் தலைமையில் இந்திய மகளிர் அணி எதிர்கொள்ளும் முதல் போட்டியாகும்.

சர்வதேச குத்துச்சண்டை சங்கமான ஏஐபிஏவின் 3 நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள ஸ்டீபன், ஐரோப்பிய குத்துச்சண்டை கூட்டமைப்பின் பயிற்சியாளர்கள் குழு உறுப்பினராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.