For the third time in the ATP Challenger competition

கர்ஷி ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கர்ஷி ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி உஸ்பெகிஸ்தானின் கர்ஷி நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் யூகி பாம்ப்ரி மற்றும் உக்ரைனின் செர்ஜி ஸ்டக்கோவ்ஸ்கி மோதினர்.

இதில், 6-2, 6-4 என்ற நேர் செட்களில் செர்ஜியை வீழ்த்தினார் யூகி.

இந்த சீசனில் மூன்றாவது முறையாக ஏடிபி சேலஞ்சர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார் யூகி பாம்ப்ரி.