இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ரஷியாவைச் சேர்ந்த டேரியா காஸட்கினாவிடம், ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் தோல்வி அடைந்தார்.

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் யாரும் எதிர்பாரத நேரத்தில் தோல்வி கண்டார்.

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் சுற்றில் "பை' பெற்றிருந்த கெர்பர் தனது 2-ஆவது சுற்றில் 4-6, 6-0, 4-6 என்ற செட் கணக்கில் ரஷியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனையான டேரியா காஸட்கினாவிடம் தோல்வி கண்டார்.

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக காஸட்கினாவிடம் தோல்வி கண்டுள்ளார் கெர்பர்.

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிட்னி சர்வதேசப் போட்டியில் தோல்வி கண்டிருந்தார்.

காஸட்கினா தனது காலிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான பியூர்ட்டோ ரிகோவின் மோனிகா பெக்கை சந்திக்கவுள்ளார்.