அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரஃபுல் படேல், சர்வதேச கால்பந்து சங்கங்கள் சம்மேளனத்தின் நிதிக் குழு உறுப்பினராக உயர்வு பெற்றுள்ளார்.

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎஃப்எஃப்) தலைவராக இருப்பவர் பிரஃபுல் படேல். இவர், நேற்று சர்வதேச கால்பந்து சங்கங்கள் சம்மேளனத்தின் (ஃபிஃபா) நிதிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அவர் அந்தப் பொறுப்பில் 4 ஆண்டுகள் இருப்பார். ஃபிஃபா-வின் நிதிக் குழுவானது, நிதி நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன், நிதி விவகாரங்களில் நிர்வாகக் குழுவினருக்கு ஆலோசனைகள் வழங்குகிறது.

பிரஃபுல் படேல் தலைமையின் கீழ், 17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி உள்ளிட்டவற்றை நடத்தும் வாய்ப்பு இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.