ரியோ டி ஜெனீரோ,

கார்லஸ் ஆல்பர்ட்டோ. இவர் பிரேசில் கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவர்.

இவர் செவ்வாய்க்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இவருக்கு 72 வயதாகிறது.

1970–ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரேசில் அணியின் கேப்டனாக இருந்தவர் கார்லஸ் ஆல்பர்ட்டோ.

அந்த உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இத்தாலியை 4–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியை பிரேசில் அடைந்ததில், ஆல்பர்ட்டோவின் பங்கு மிகவும் முக்கியமானது.

இந்த ஆட்டத்தில் ஆல்பர்ட்டோவின் அற்புதமான ஒரு கோலை இன்று வரை யாராலும் மறக்க முடியாததாக இருக்கிறது.

இவர் இதுவரை 53 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவரப் போன்ற விளையாட்டு வீரரகள் மறிப்பது என்பது இவரது இரசிகர்களை மிகவும் துக்கத்தில் ஆழ்த்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை…