மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 83 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 255 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ஷார்ஜாவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் அசார் அலி, பின்னர் வந்த ஆசாத் ஷபிக் ஆகியோர் டக் அவுட்டாயினர்.

இதன்பிறகு யூனிஸ்கான் 51, சமி அஸ்லாம் 74 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கேப்டன் மிஸ்பா உல் ஹக் 53, விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் அஹமது 51 ஓட்டங்கள் எடுத்தனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 83 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 255 ஓட்டங்கள் எடுத்துள்ளது பாகிஸ்தான்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் தேவேந்திர பிஷு 4 விக்கெட்டுகளையும், காபிரியேல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.