First entry into Brazil in the World Cup this time

ரஷியாவில் 2018-ல் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் முதல் அணியாக இந்த முறையும் பிரேசில் அணி தகுதிப் பெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து - 2018 போட்டிக்கான தென் அமெரிக்க நாடுகளுக்கான தகுதிச் சுற்று உருகுவே தலைநகர் மான்டிவிடியோவில் நடைபெறுகிறது.

இதில் நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பிரேசில் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியை பங்கமாக தோற்கடித்தது.

அதேசமயத்தில் பெரு அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

இதனால் புள்ளிகள் பட்டியில் முதல் நான்கு இடங்களில் ஒன்றை பிடிப்பதை உறுதி செய்தது பிரேசில் அணி. இதன்மூலம் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றது.

உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் பிரேசில் அணி தொடர்ச்சியாக 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.