Fire Brigade team won the South Regional Champion played fiery

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இடையிலான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் தென் மண்டல அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இடையிலான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி மதுரை டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டரங்கில் மார்ச் 10-ஆம் தேதி தொடங்கியது.

இதில் தீயணைப்பு மீட்புப் பணித் துறை போட்டிகளான கயிறு ஏறுதல், நீச்சல், தடகளம், வாலிபால், கூடைப்பந்து, இறகுப்பந்து போட்டிகள் நடைபெற்றன.

இதில் தென் மண்டல அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், தீயணைப்பு மீட்புப் பணித் துறை இயக்குநர் ஆர்.சி.குடாவ்லா கலந்து கொண்டு, வீரர்களுக்கு கோப்பைகளை வழங்கிப் பேசியது:

“தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறைக்கும், மற்ற துறைகளுக்கும் பெரும் வேறுபாடு உண்டு. உடல் வலிமை, மன தைரியம் ஆகியவை இருந்தால் மட்டும்தான் இங்கு பணிபுரிய முடியும். மீட்புப்பணிகளின்போது அச்சமின்றி பணிபுரிய வேண்டும்” என்று தெரிவித்தார்.