Field judges should stay awake in the IPL match - Rajiv Shukla

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கள நடுவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய ஆட்டத்தில் ஒரு ஓவரில் நடுவரின் கவனக் குறைவால் 7 பந்துகள் வீசப்பட்டன. 

அதேபோல, கடந்த ஞாயிற்றுக்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளிடையேயான ஆட்டத்தில் 'நோ பால்' வீசப்பட்டது தெளிவாகத் தெரிந்தது. எனினும், அதை கள நடுவர் கவனிக்கத் தவறியது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில், ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அதில், "கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்கள் தவறிழைப்பது எப்போதாவது நடப்பது தான். ஆனாலும், முடிந்த வரையில் அவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். 

மேலும், முடிந்த அளவு தவறுகளை குறைக்கும் வகையில், தேவைப்படும் பட்சத்தில் 3-வது நடுவர் உள்ளிட்ட தொழில்நுட்ப உதவிகளை நாடுமாறும் கள நடுவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்" என்று " என்று ராஜீவ் சுக்லா கேட்டுக் கொண்டார்.