Federer and Nadal advanced to next round in Montreal Masters tennis

மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் உள்ளிட்டோர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மற்றும் கனடாவின் பீட்டர் போலன்ஸ்கையுடன் மோதினார்.

இதில், 6-2, 6-1 என்ற நேர் செட்களில் பீட்டர் போலன்ஸ்கையை வீழ்த்தினார் ரோஜர்.

போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ஃபெடரர், தனது காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் ஸ்பெயினின் டேவிட் ஃபெரரை சந்திக்கிறார்.

போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தனது 2-வது சுற்றில் குரோஷியாவின் போர்னா கோரிச்சுடன் மோதினார்.

இதில், 6-1, 6-2 என்ற நேர் செட்களில் போர்னா கோரிச்சை தோற்கடித்தார் நடால்.

நடால் தனது 3-வது சுற்றில் கனடாவின் டெனிஸ் ஷபலோவை சந்திக்கிறார்.

போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-3, 4-6, 7-6 (3) என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டை தோற்கடித்தார்.

ஸ்வெரேவ் தனது 3-வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸை சந்திக்கிறார்.