Federation Cup ONGC Men team and Women kerala teams continue to dominate ..
பெடரேஷன் கோப்பை கூடைப்பந்து போட்டியில் ஒஎன்ஜிசி ஆடவர் மற்றும் கேரள மகளிர் அணிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
பெடரேஷன் கோப்பை கூடைப்பந்து போட்டியில் இந்திய கூடைப்பந்து சம்மேளனம் சார்பில் சித்தூரில் நடைபெற்று வருகின்றன.
இதில் நாடு முழுவதும் இரு பிரிவிலும் தலைசிறந்த எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. ஆடவர் பிரிவில் நடப்புச் சாம்பியன் ஒஎன்ஜிசி தொடர்ந்து வெற்றியை குவித்து வருகிறது.
அதன்படி, வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஒஎன்ஜிசி அணி 62-34 என்ற புள்ளிக்கணக்கில் கொச்சி மத்திய சுங்கத்துறை அணியை வென்றது.
அதேபோன்று, மகளிர் பிரிவில் கேரள அணி 60-41 என்ற புள்ளிக்கணக்கில் நடப்புச் சாம்பியன் சத்தீஸ்கர் அணியை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்து வருகிறது.
மற்றொரு ஆடவர் பிரிவு ஆட்டத்தில் ஜோத்பூர் பிஎஸ்எப் அணி 47-25 என்ற புள்ளிக்கணக்கில் ஆந்திர மாநில விளையாட்டு ஆணைய அணியை வென்றது.
மகளிர் பிரிவில் தெலங்கானா 49-32 என டெல்லியை வீழ்த்தியது. தமிழகம் 56-47 என்ற புள்ளிக்கணக்கில் கர்நாடகத்தையும் வீழ்த்தியது.
இறுதிச் சுற்று ஆட்டங்கள் நாளை மாலை நடைபெறுகிறது என்பது கூடுதல் தகவல்.
