Fed Cup tennis India - China game today ...

ஃபெட் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில் இந்தியா - சீனா அணிகள் இன்று மோதுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஃபெட் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில் இந்தியா - சீனா அணிகள் இன்று மோதும் ஆட்டத்தில் இந்தியாவின் சார்பில் அங்கிதா ரெய்னா, கர்மான் தன்டி கெளர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

'ஏ' பிரிவில் இந்தியாவுடன், கஜகஸ்தான், ஹாங்காங், சீனா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. கடந்த 1991-க்குப் பிறகு ஃபெட் கோப்பை உலக குரூப் சுற்றுக்கு இந்தியா தகுதி பெறாத நிலையில், பலம் வாய்ந்த அணிகளின் பிரிவில் தற்போதும் இடம்பெற்றிருக்கிறது.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்தியாவின் அங்கிதா மற்றும் கர்மான் இருவருமே கடந்த ஆண்டு ஐடிஎஃப் சர்கியூட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டனர்.

அங்கிதா தனது முதல் ஆட்டத்தில் உலகின் 120-ஆம் நிலை வீராங்கனையான லின் ஸுவை சந்திக்கிறார். கடந்த ஆண்டு மே மாதம் லுவான் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் லின் ஸுவிடம் தோல்வி கண்டிருந்தார் அங்கிதா.

மற்றொரு இந்திய வீராங்கனையான கர்மான் தன்டி கெளர் முதல் ஆட்டத்தில் உலகின் 125-ஆம் நிலை வீராங்கனையான வாங் யஃபானுடன் களம் காணுகிறார்.