இங்கிலாந்து - இந்தியா இடையேயான கிரிக்கெட் ஆட்டத்தின்போது, மைதானத்தில் நாய் ஒன்று நுழைந்து ஆட்டநாயகர்களுக்கு ஆட்டம் காட்டியது.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 57-ஆவது ஓவரின் முதல் இரு பந்துகளை மட்டுமே வீசியிருந்த நிலையில் திடீரென நாய் ஒன்று மைதானத்துக்குள் புகுந்தது. ஆடுகளம் வரை வந்த அந்த நாயை விரட்ட பிராட் முயற்சி செய்தார். ஆனால் அவரின் முயற்சி பலிக்கவில்லை.
இதையடுத்து அதை விரட்டுவதற்காக மைதான ஊழியர்கள் இருவர் களம்புகுந்தனர். ஆனால் அவர்களுக்கும் தண்ணி காட்டியது அந்த நாய்.
இதனால் கோபமடைந்த அவர்கள் ஷூவை கழற்றி நாயை நோக்கி எறிந்தனர். ஆனால் அதற்கும் அந்த நாய் அஞ்சவில்லை.
இதையடுத்து வேறு வழியில்லாததால் முன்னதாகவே தேநீர் இடைவேளை விடப்பட்டது. அதன்பிறகு கடும் முயற்சிக்கு பிறகு அந்த நாய் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டது
