Do you know any place for Indian men and women teams in the international hockey rankings?
சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய ஹாக்கி ஆடவர் அணி 6-வது இடத்தையும், ஹாக்கி மகளிர் அணி 10-வது இடத்தையும் பெற்றுள்ளது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நேற்று தரவரிசைப் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில், இந்திய ஹாக்கி ஆடவர் அணி 6-வது இடத்தில் நீடிக்கிறது. இந்திய ஹாக்கி மகளிர் அணி 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
புணேவில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. எனினும், 1566 புள்ளிகளுடன் தொடர்ந்து 6-வது இடத்திலேயே நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2005 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. அர்ஜென்டீனா 1975 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது.
இதனிடையே, இந்திய ஹாக்கி மகளிர் அணி 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தில் உள்ளது. ஆசிய கோப்பையை வென்றதன் மூலம் ஸ்பெயின், ஜப்பான் அணிகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 10-வது இடத்தைப் பிடித்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் நெதர்லாந்து 2165 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்து அணி 1823 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
