இலண்டன்,

தரவரிசையில் டாப்–8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் “ஏ.டி.பி. உலக டூர் இறுதிச்சுற்று” போட்டியில் டொமினிக்கை போராடி வெற்றிப் பெற்றார் ஜோகோவிச்.

தரவரிசையில் டாப்–8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் “ஏ.டி.பி. உலக டூர் இறுதிச்சுற்று” என்று அழைக்கப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இலண்டனில் தொடங்கியது.

இதில் ஒரு பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), நிஷிகோரி (ஜப்பான்), மரின் சிலிச் (குரோஷியா) ஆகியோரும், மற்றொரு பிரிவில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா), மிலோஸ் ராவ்னிக் (கனடா), மான்பில்ஸ் (பிரான்ஸ்), டொமினிக் திம் (ஆஸ்திரியா) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுன்ட்–ராபின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரையிறுதிக்குள் அடியெடுத்து வைப்பார்கள்.

ஞாயிற்றுக்கிழமை தொடக்க ஆட்டத்தில் 2–ம் நிலை வீரர் ஜோகோவிச், டொமினிக் திம்மை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த மோதலில் ஜோகோவிச் 6–7 (10–12), 6–0, 6–2 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.