Dinesh Karthik wants to play for India in championship trophy

சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு எல்லா வகையிலும் தயாராக இருக்கிறேன் என்று சாம்பியன் டிராபியில் விளையாட நினைக்கும் தனது விருப்பத்தைச் சொன்னார் தினேஷ் கார்த்திக்.

தினேஷ் கார்த்திக் இலண்டனில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

‘வங்காளதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டம் எனது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைந்தது.

மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்போது நான் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு எல்லா வகையிலும் தயாராக இருப்பதாக கருதுகிறேன்’ என்று தெரிவித்தார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக், வங்காளதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 94 ஒட்டங்கள் குவித்து அசத்தினார். இதனால் அவருக்கு ஆடும் லெவன் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் உண்டா? இல்லைய? என்பது ஜூன் 4-ம் தேதி இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதும் ஆட்டத்தின் போதே தெரியும்.