dhoni took photo with Pakistan Captain Baby

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதயதில் இந்தியா படுதோல்வி அடைந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்பாஸ் அகமதுவின் குழந்தையுடன், இந்திய வீரர் தோனி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் தனது அபாராமான ஆட்டத்தால் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் வென்றது. இதனால், இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்ற நிலையில் தனது நாட்டில் வந்து மற்ற நாட்டு அணிகள் விளையாட வேண்டும் என்று கோரிக்கையை அந்த அணியின் கேப்டன் சர்பாஸ் அகமது விடுத்தார்.

இந்தச் சூழலில் பாகிஸ்தான் கேப்டன் சர்பாஸ் அகமதுவின் ஆண் குழந்தையை, இந்திய வீரர் தோனி தன் கையில் தூக்கி வைத்தபடி நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பெரும்பாலான ரசிகர்கள் ஆவலுடன் பகிர்ந்து வரும் இந்தப் புகைப்படமானது தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மற்ற அணிகளோடு தோனி எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்போது பாகிஸ்தான் அணியின் வீரரின் குழந்தையோடு எடுத்தப் புகைப்படமும் வரவேற்பை பெறுவது இயல்பே. தல தோனியும் சரி அவரது ரசிகர்களும் சரி எப்பவும் தங்களுக்கென்று தனி ஸ்டைலோடு உலா வருகின்றனர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டனர்.

மாறாக இந்தப் புகைப்படத்தை வைத்து இந்திய மக்களின் உணர்வுகளோடு விளையாட தேச பக்தர்கள் என்று ஒரு கூட்டம் கிளம்பி வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பினாலும் தல தோனியின் ரசிகர்கள் நிதானமாக சிந்தித்து சர்ச்சையைக் கூட பாசிட்டிவாக சந்தித்து உண்மையான தேசபகதர்கள் யார் என்று புரியவைக்கத் தவறவில்லை.