Asianet News TamilAsianet News Tamil

ஒரே போட்டியில் சாதனைகளை வாரி குவித்த “தல” தோனி..!

dhoni records in ipl and twenty over matches
dhoni records in ipl and twenty over matches
Author
First Published May 21, 2018, 10:47 AM IST


பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் மூன்று மைல்கல்களை தோனி எட்டியுள்ளார். 

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

கடைசி லீக் போட்டி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே புனே மைதானத்தில் நேற்றிரவு 8 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

விக்கெட் கீப்பிங்கில் சாதனை:

இந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் விக்கெட் கீப்பர் தோனி 3 கேட்ச்சுகளை பிடித்தார்.  இதன் மூலம் டி20 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் மற்றும் அதிகமான கேட்ச்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற இரு சாதனைகளை தோனி படைத்துள்ளார்.

dhoni records in ipl and twenty over matches

டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த காரணம்:

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 3 கேட்ச்சுகள் பிடித்ததன் மூலம், டி20 போட்டிகளில் 216 விக்கெட்டுகள் விழ தோனி காரணமாக இருந்துள்ளார். இந்த பட்டியலில் தோனிக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தான் அணியின் காம்ரான் அக்மலும் மூன்றாவது இடத்தில் இலங்கை அணியின் குமார் சங்ககராவும் உள்ளனர்.

டி20 போட்டிகளில் அதிக கேட்ச்சுகள்:

மேலும் டி20 போட்டிகளில் அதிக கேட்ச்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் தோனி படைத்துள்ளார். 144 கேட்ச்சுகளுடன் தோனி முதலிடத்தில் உள்ளார். 142 கேட்ச்களுடன் சங்ககரா இரண்டாவது இடத்திலும் 139 கேட்ச்களுடன் தினேஷ் கார்த்திக் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

பேட்டிங்கில் புதிய மைல்கல்:

பஞ்சாப்புக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 154 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சென்னை அணியின் கேப்டன் தோனி, 16 ரன்கள் எடுத்தார். 9வது ரன்னை எடுத்தபோது, ஐபிஎல்லில் 4000 ரன்களை கடந்த வீரர் என்ற மைல்கல்லை தோனி எட்டினார். 

dhoni records in ipl and twenty over matches

இதுவரை 173 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 157 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள தோனி, 2888 பந்துகளில் 4007 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 20 அரைசதங்கள், 274 பவுண்டரிகள் மற்றும் 186 சிக்ஸர்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 79* ஆகும். 

ஐபிஎல்லில் 4000 ரன்களை எட்டும் 7வது வீரர் தோனி. தோனிக்கு முன்னதாக விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, கௌதம் காம்பீர், உத்தப்பா, டேவிட் வார்னர் ஆகிய 6 வீரர்களும் 4000 ரன்களை கடந்துள்ளனர். இவர்கள் அனைவருமே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கி 4000 ரன்களை கடந்துள்ளார் தோனி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios