dhoni reached new milestone in ipl

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தோனி செய்துள்ளார். மூன்றுவிதமான ஐசிசி சாம்பியன்சிப்பையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் தோனி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சாதனைகளை புரிந்துள்ளார்.

தற்போது ஐபிஎல் கேப்டனாக தோனி, புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதுவரை நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 10 சீசன்களில் 8 சீசனில் சென்னை அணிக்கும் ஒரு தொடரில் புனே அணிக்கும் கேப்டனாக செயல்பட்டுள்ளார். சென்னை அணிக்கு 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

இரண்டு ஆண்டு கால தடைக்கு பிறகு இந்த சீசனில் கலந்துகொண்டு சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தமுறையும் தோனி தான் கேப்டன். தோனியின் கேப்டன்சியில் 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை அணியின் கேப்டன் தோனி, நேற்றைய மும்பைக்கு எதிரான போட்டிக்கு கேப்டன்சி செய்ததன் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நேற்றைய போட்டிக்கு ஐபிஎல் தொடரில் தோனிக்கு கேப்டனாக 150வது போட்டி. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 150 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.