ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. தோனி தலைமையிலான சென்னை அணி மீண்டும் களமிறங்குவதால், சென்னை அணியின் ரசிகர்களும் தோனியின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

இதுவரை ஐபிஎல் தொடரை வென்றிராத, பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகள், ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளன.

இந்த சீசனில் இரண்டு அணிகளுக்கு தமிழக வீரர்கள் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். பஞ்சாப் அணிக்கு அஸ்வினும் கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்கும் கேப்டன்களாக செயல்பட உள்ளனர். இதுவரை தோனியின் கேப்டன்சியின் கீழ் ஆடிவந்த அஸ்வின், இந்தமுறை தோனியை எதிர்த்து விளையாடுகிறார். அதுவும் கேப்டனாக.. அதனால் இந்த ஐபிஎல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான முன்னாள் சாம்பியன் சென்னை அணியும் மோதுகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாமல் இருந்த சென்னை அணி, தோனி தலைமையில் மீண்டும் களம் காண்கிறது. தோனி, பிராவோ, ஹர்பஜன் உள்ளிட்ட சென்னை அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.

சென்னை வந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

How's that for a cool off drive?! #Thala #HomeSweetDen #WhistlePodu pic.twitter.com/z85jVDHQwk
— Chennai Super Kings (@ChennaiIPL) March 22, 2018

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டிக்காக சென்னை மண்ணில் கால் வைத்திருக்கும் வீரர்கள், பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

Get that ball back from the car parking please! - #Thala #HomeSweetDen 💛🦁 pic.twitter.com/D7mCwp7Poe
— Chennai Super Kings (@ChennaiIPL) March 22, 2018

இந்த வீடியோவை சென்னை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.