தோனி தன் மகள் ஸிவாவுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாக திகழ்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 2008ம் ஆண்டிலிருந்து தற்போது வரை நீடித்துவருகிறார். சென்னை அணி இடையில் தடை பெற்றிருந்த இரண்டு சீசன்களை தவிர மற்ற 9 சீசன்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இன்னும் அவர் தான் கேப்டனாக உள்ளார்.

சென்னை அணியில் நீண்ட காலமாக ஆடிவருவதால் அவருக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தோனி, சென்னை எனது இரண்டாவது வீடு என பலமுறை கூறியுள்ளார். அந்தளவிற்கு அவருக்கும் சென்னைக்கும் இடையேயான நெருக்கம் அதிகம் மட்டுமல்லாமல் உணர்வுப்பூர்மானதும் கூட.

தோனி தன் மகள் ஸிவாவுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும். அண்மையில் இருவரும் தமிழில் பேசிக்கொண்ட வீடியோ வைரலானது. இந்நிலையில், அண்மையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தோனி, குடும்பத்துடன் சென்னை மெரினா கடற்கரையில் செலவிட்டு மகிழ்ந்துள்ளார்.

அப்போது, தோனி அவரது மகள் ஸிவாவுடன் விளையாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

View post on Instagram
Scroll to load tweet…