ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று சாதனை படைத்தது. அதன்பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்த இந்திய அணி, அடுத்ததாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி. 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. சொந்த மண்ணில் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, அதேபோலவே சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

நாளை(24ம் தேதி) மற்றும் 27ம் தேதி ஆகிய தேதிகளில் இரண்டு டி20 போட்டிகள் நடக்கின்றன. அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. 

சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ள நிலையில், உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இது என்பதால், இதில் வென்று அதே உத்வேகத்துடன் உலக கோப்பைக்கு செல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அந்நிய மண்ணிலேயே வெற்றிகளை குவித்து வரும் வலுவான இந்திய அணியை, சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. 

எனினும் இரு அணிகளுமே வெற்றிக்காக தீவிரமாக தயாராகிவருகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சரியாக ஆடாத தோனி, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில்தான் ஃபார்முக்கு திரும்பினார். அவர் செம ஃபார்மில் இருக்கிறார். நாளை ஆஸ்திரேலிய தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்திய வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தோனி தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோவை பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. தோனி அபாரமான சில ஷாட்டுகளை பயிற்சியில் ஆடியுள்ளார்.