Dhoni is a man with 41 runs in 2 overs when he is on the field.

தோனியைப் போன்ற ஒருவர் களத்தில் நிற்கும்போது ஓர் அணி கடைசி 2 ஓவர்களில் 41 ஓட்டங்கள் குவிப்பது வழக்கமான ஒன்றுதான் என்று மும்பை இண்டியன்ஸ் தொடக்க வீரர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸிடம் தோற்றது மும்பை இண்டியன்ஸ்.

இந்த தோல்விக்கு பிறகு சந்தித்த பார்த்திவ் படேல் செய்தியாளரிடம் கூறியது:

“டி20 கிரிக்கெட்டில் தோனியைப் போன்ற ஒருவர் களத்தில் நிற்கும்போது ஓர் அணி கடைசி 2 ஓவர்களில் 41 ஓட்டங்கள் குவிப்பது வழக்கமான ஒன்றுதான்.

ஆரம்பத்தில் நாங்கள் புணே அணியைக் கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால், கடைசி 2 ஓவர்களில் 41 ஒட்டங்களை வழங்கியதால்தான் தோற்றோம் என சொல்லமாட்டேன்” என்று கூறினார்.