Dhoni got padma Booshan award from president of India in Military dress
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்று வந்த நாளில் மகேந்திர சிங் தோனிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மபூஷண் விருது அளித்து கவுரப்படுத்தியுள்ளார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக் கூடிய நபா்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக விருதுகள் வழங்கப்படுகின்றன. இரண்டாம் கட்டமாக நேற்று வழங்கப்பட்ட விழாவில் மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட முக்கிய நபா்கள் விருதுகளை பெற்றனா்.

இதில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரா் மகேந்திர சிங் தோனிக்கு பத்ம பூஷண் விருதை குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். விழாவில் தோனி ராணுவ உடையில் மிடுக்கான நடையுடன் வந்து விருதினை பெற்றுக் கொண்டார்.

நேற்று தோனிக்கு விருது வழங்கப்பட்டதில் ஒரு சிறப்பு இருக்கிறது. இது தற்செயலா அல்லது திட்டமிட்டு வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆம். ஏப்ரல் 2-ம் தேதி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் இதே நாளில் தோனி, நுவன் குலசேகராவை சிக்ஸ் அடித்து உலக கோப்பையை வெல்ல பங்களிப்பு செய்தார்.
இதே தினத்தில்தான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோப்பை நாயகனுக்கு பத்மபூஷன் விருது வழங்கினார்.
