Asianet News TamilAsianet News Tamil

விஜய் சங்கருக்கு தோனி கொடுத்த செம அட்வைஸ்

உலக கோப்பை அணிக்கான வீரர்களில் தீவிரமாக பரிசீலிக்கப்படும் வீரரான விஜய் சங்கர், தோனியுடனான உறவு குறித்தும் தோனி தனக்கு வழங்கிய ஆலோசனை குறித்தும் மனம் திறந்துள்ளார். 

dhoni gave usefull advise to all rounder vijay shankar
Author
India, First Published Feb 23, 2019, 2:41 PM IST

நியூசிலாந்து தொடரில் சிறப்பாக ஆடி உலக கோப்பை அணிக்கான வீரர்களில் தீவிரமாக பரிசீலிக்கப்படும் ஒரு வீரர் விஜய் சங்கர். 

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கரின் பெயர், உலக கோப்பைக்கான அணியில் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று வீரராக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய தொடர்களில் அணியில் இணைந்தார் விஜய் சங்கர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான விஜய் சங்கர், நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் 3ல் ஆடினார். அதில் கடைசி போட்டியில் ராயுடுவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பாக ஆடினார் விஜய் சங்கர். அந்த ஆட்டம் அவர் மீதான நம்பிக்கையை அணி நிர்வாகத்துக்கு அதிகரித்தது. 

dhoni gave usefull advise to all rounder vijay shankar

அதன்பிறகு முதல் டி20 போட்டியில் முக்கியமான இடமான மூன்றாவது வரிசையில் களமிறக்கப்பட்டார். அதில் பெரிதாக சோபிக்கவில்லை. பின்னர் இரண்டாவது போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்படவில்லை. ஆனால் கடைசி போட்டியில் 213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுக்க, இக்கட்டான மற்றும் அடித்து ஆட வேண்டிய சூழலில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்பட்டார் விஜய் சங்கர். தன் மீது அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையை கெடுக்காமல், ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடினார் விஜய் சங்கர். 28 பந்துகளில் 43 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரோஹித் - விஜய் சங்கர் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக அமைந்தது.

dhoni gave usefull advise to all rounder vijay shankar

பவுலிங்கில் விஜய் சங்கர் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், பேட்டிங்கில் ஓரளவிற்கு ஆடினார். ஃபீல்டிங்கும் நன்றாக செய்தார். பவுண்டரி லைனிலிருந்து நேரடியாக ஸ்டம்பை அடித்து டெய்லரை அவர் செய்த ரன் அவுட் அபாரமானது. நியூசிலாந்து தொடரில் விஜய் சங்கர் சிறப்பாக ஆடியிருந்தார்.

பேட்டிங், ஃபீல்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டாலும் பவுலிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. அவருக்கு பந்துவீச வாய்ப்புகளும் பெரிதாக வழங்கப்படவில்லை. கிடைத்த வாய்ப்புகளில் அவரும் பெரிதாக ஜொலிக்கவில்லை. அவரது பந்துவீச்சில் வேகமில்லை. 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருக்கும் விஜய் சங்கர், ஈஎஸ்பின் கிரிக் இன்ஃபோ இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் தோனியுடனான உறவு குறித்து பேசிய விஜய் சங்கர், தோனி அவருக்கு அளித்த ஒரு ஆலோசனையை கூறினார். 

dhoni gave usefull advise to all rounder vijay shankar

தோனி வழங்கிய ஆலோசனை குறித்து பேசிய விஜய் சங்கர், ஹாமில்டன் ஒருநாள் போட்டியில் நானும் தோனியும் ஆடவில்லை. அப்போதுதான் அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, உன்னுடைய பேட்டிங், ஃபீல்டிங் நன்றாக இருக்கிறது. ஆனால் பவுலிங்கில் இப்போது நீ வீசுவதைவிட இன்னும் வேகமாக வீச வேண்டும். அதுவும் உனது உடலமைப்புக்கு இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்ட வேண்டும். அப்படி வேகத்தை கூட்டினால் பவுலிங்கின் வலுவும் கூடும். பழைய பந்திலும் ஸ்விங் செய்ய முடியும். அதனால் சில விஷயங்களை சரிசெய்து கொண்டு பவுலிங்கில் மேம்பட்டால் சிறந்த ஆல்ரவுண்டராக திகழலாம் என்று தோனி ஆலோசனை வழங்கியதாக விஜய் சங்கர் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios