dhoni gave ideas to indian team for winning test matches
அந்நிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆலோசனை வழங்கியுள்ளார்.
சூதாட்டப் புகார் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பங்கேற்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த சீசனில் கலந்துகொள்கிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் களம் காணும் சென்னை அணியை தோனியே தலைமையேற்று வழிநடத்த உள்ளார்.
இதுதொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தோனி, தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தது தொடர்பாகவும் வெற்றி பெறுவதற்கான வியூகத்தையும் தெரிவித்தார்.
டெஸ்ட் போட்டியில் வெல்ல 20 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். 2 டெஸ்ட் போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவை இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆல் அவுட் செய்தோம்.
அடுத்தது.. டெஸ்ட் போட்டியை டிரா செய்ய பார்க்க வேண்டும். எப்படி ட்ரா செய்ய முடியும்? குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்து அதிக ரன்களை எடுப்பதன் மூலமே போட்டியை டிரா செய்ய முடியும்.
இந்தியாவோ மற்ற நாடுகளோ எங்கு விளையாடினாலும் சரி.. 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும். அப்படி வீழ்த்தவில்லை என்றால், வெற்றி பெற முடியாது. அப்படி பார்க்கையில், கடந்த 2 போட்டிகளிலும் நாம் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளோம். எனவே நாம் டெஸ்ட் போட்டியை வெல்வதற்கு அருகில் தான் இருக்கிறோம். ரன்கள் மட்டும் அடிக்க தொடங்கிவிட்டால் நிச்சயம் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவோம் என தோனி தெரிவித்தார்.
இதன்மூலம் பந்துவீச்சாளர்கள் தங்களது பணியை செவ்வனே செய்தனர். பேட்ஸ்மேன்களின் சொதப்பல்களால்தான் இந்தியா தோற்றது என்பதை தோனி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
