Asianet News TamilAsianet News Tamil

பசங்க நல்லா ஆடிட்டு இருக்காங்க.. நான் புகுந்து கெடுக்க விரும்பல!! மரியாதையா ஒதுங்கிய தோனி

விஜய் ஹசாரே தொடரில் நாக் அவுட் சுற்று போட்டிகளில் ஜார்கண்ட் அணிக்காக தோனி ஆடவில்லை. அதற்கான காரணத்தை அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
 

dhoni do not want to disturb jharkhand team in vijay hazare
Author
India, First Published Oct 14, 2018, 12:38 PM IST

விஜய் ஹசாரே தொடரில் நாக் அவுட் சுற்று போட்டிகளில் ஜார்கண்ட் அணிக்காக தோனி ஆடவில்லை. அதற்கான காரணத்தை அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடர் நடந்துவருகிறது. லீக் சுற்றின் முடிவில் மும்பை, மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, ஹைதராபாத், பீகார், ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய 8 அணிகளும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. பெங்களூருவில் இன்று இரண்டு காலிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன. 

ஒரு போட்டியில் மும்பை - பீகார் அணிகளும் மற்றொரு காலிறுதி போட்டியில் டெல்லி-ஹரியானா அணிகளும் மோதுகின்றன.  ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்காத மற்றும் இந்திய அணியில் ஆட நீண்ட காலமாக வாய்ப்பு கிடைக்காத இந்திய வீரர்கள் விஜய் ஹசாரேவில் ஆடிவருகின்றனர். ரெய்னா, காம்பீர், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் விஜய் ஹசாரேவில் ஆடிவருகின்றனர். 

dhoni do not want to disturb jharkhand team in vijay hazare

ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் தோனி, மீண்டும் ஃபார்முக்கு வரும் விதமாக விஜய் ஹசாரேவில் ஆடுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்துவந்தது. பேட்டிங்கில் மிகவும் மோசமாக செயல்பட்டு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடாததால், நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் மற்றும் விஜய் ஹசாரே போன்ற உள்ளூர் போட்டிகளில் ஆடுவது, தோனிக்கு பேட்டிங்கில் டச்சிலேயே இருக்கும் உதவும் என்பதால், இந்த போட்டிகளில் தோனி ஆட வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் கருத்து தெரிவித்திருந்தார். 

dhoni do not want to disturb jharkhand team in vijay hazare

ஆனால், தோனி விஜய் ஹசாரேவில் ஆடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார். இதுகுறித்து பேசிய ஜார்கண்ட் அணியின் பயிற்சியாளர், ஜார்கண்ட் அணி இதுவரை நன்றாக ஆடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. எனவே இந்த நேரத்தில் அணியில் இணைந்து அணியின் நிலைத்தன்மையை சீர்குலைக்க வேண்டாம் என்று கருதி, தோனி ஜார்கண்ட் அணியில் ஆட மறுத்துவிட்டார் என்று கூறியுள்ளார். 

இந்திய அணியின் சீனியர் வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனி, உள்நாட்டு போட்டியில் எல்லாம் ஆடுவாரா? என்பது ஒருபுறமிருக்க, தோனிக்கு ஜார்கண்ட் அணியில் ஆடுவது பெரிய விஷயமில்லை. ஆனால் தான் பேட்டிங்கில் டச்சில் இருப்பதற்காக தனது சுயநலத்திற்காக நன்றாக ஆடிவரும் அணியை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்று தோனி தெரிவித்திருக்கிறார். எப்போதுமே அணியின் நலனை அக்கறை கொண்ட தோனி, இப்போதும் அதைத்தான் செய்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios