தோனிக்கும் பிராவோவுக்கும் இடையே நடந்த ரன் ஓடும் போட்டியில் ஒரு நொடி வித்தியாசத்தில் பிராவோவை முந்தி, வேகமாக ஓடுவதில் தான் வல்லவர் என்பதை தோனி மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார்.

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு ஐபிஎல் 11வது சீசனில் தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, வாட்சனின் அதிரடியால் கோப்பையை வென்று அசத்தியது. கோப்பையை வென்ற கொண்டாட்டத்திற்கு இடையே தோனியும் பிராவோவும் தங்களுக்குள் ஒரு போட்டி வைத்துக்கொண்டனர்.

ரன் ஓடும் போட்டி தான் அது. இருவரும் ஒரே நேரத்தில் ரன் ஓட தொடங்கி மூன்று ரன்கள் ஓடுகின்றனர். மூன்றாவது ரன் முடியும்போது, பிராவோவிற்கு சற்று முன்னதாக கிரீஸுக்குள் நுழைந்து தோனி வெற்றி பெற்றுவிடுகிறார். இந்த வீடியோவை சிஎஸ்கே அணி, டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

When Thala challenged Champion for a three run dash, post the victory yesterday! Any guesses who wins it? #whistlepodu #SuperChampions 🦁💛 pic.twitter.com/k8OzIPMyxo
— Chennai Super Kings (@ChennaiIPL) May 28, 2018

விளையாடுவதற்கு வயது தடையில்லை. உடல் தகுதி தான் முக்கியம் என்பதை தோனி மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார். பொதுவாகவே வேகமாக ஓடுவதில் தோனி வல்லவர். 36 வயது ஆகிவிட்டபோதும் இளம் வீரர்களுக்கு ஈடாக தோனி ஓடுவார். அண்மையில் ஹர்திக் பாண்டியாவிற்கு ஈடாக தோனி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த சீசனில் சென்னை அணியில் ஆடிய பெரும்பாலான வீரர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள். தோனி(36), வாட்சன்(37), பிராவோ(34), ஹர்பஜன் சிங்(37), ராயுடு(32), ரெய்னா(31). அதனால் வயதான அணி என கிண்டல்களும் செய்யப்பட்டன. ஆனால் வயது ஒருபுறமிருக்க, அவர்களின் அனுபவத்தை பயன்படுத்தி கோப்பையை வென்று, அணி மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்தனர்.