Dhoni breaks world record for most catches in T20 cricket
இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.டோனி முதலிடத்தை பிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
இலங்கை வீரர் குமார் சங்கக்கரா 254 டி20ல் 133 கேட்ச் பிடித்ததே உலக சாதனையாக இருந்தது.
சர்வதேச டி20 போட்டிகளில் 77 விக்கெட் வீழ்ச்சிக்கு பங்களித்துள்ள வகையிலும் (48 கேட்ச், 29 ஸ்டம்பிங்) அவர் புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 87 சர்வதேச டி20ல் அவர் 48 கேட்ச் பிடித்ததும் உலக சாதனை.
இந்நிலையில் தென் ஆப்ரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான டி20 போட்டி ஜோகன்னஸ்பர்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அதில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் கொடுத்த கேட்ச்சை பிடித்த டோனி, டி20 போட்டிகளில் 134 கேட்ச்சுடன் முதலிடம் பிடித்தார்.
இதன்மூலம் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.டோனி முதலிடத்தை பிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
