Dharmapuri team champion in state kabaddi tournament for girls

மாநில அளவிலான சிறுமியர்களுக்கான கபடிப் போட்டியில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி தருமபுரி அணி வாகைச் சூடி அசத்தியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

29-ஆவது மாநில அளவிலான சிறுமியர்களுக்கான கபடி சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதனை தமிழ்நாடு அமெச்சூர் கபடிக் கழகமும், திருவண்ணாமலை மாவட்ட கபடிக் கழகமும் இணைந்து நடத்தின.

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் நடைப்பெற்ற இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 26 அணிகள் கலந்து கொண்டன.

நேற்று நடைபெற்ற இதன் இறுதி ஆட்டத்தில் தருமபுரி, திண்டுக்கல் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த் ஆட்டத்தில் தருமபுரி அணி 36-26 என்ற புள்ளிகள் கணக்கில் திண்டுக்கல் அணியை தோற்கடித்து வாகைச் சூடின.

வெற்றிப் பெற்ற அணிகளுக்குப் பரிசு வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடிக் கழக நிர்வாகி எம்.ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.