Denmark Tilt player Jayaram saw progress to the quarter finals

மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்ஸெல்சனை சாய்த்து காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டார்.

மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி மலேசியாவின் குச்சிங் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஜெயராம் மற்றும் போட்டித் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸெல்சன் ஆகியோர் மோதினர்,

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 9-21, 21-14, 21-19 என்ற செட் கணக்கில் ஆக்ஸெல்சனை தோற்கடித்து அதிரவைத்தார் ஜெயராம்.

வெற்றிப் பெற்ற ஜெயராம் தனது காலிறுதியில், போட்டித் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் தென் கொரியாவின் சன் வான் ஹோவுடன் மோதுகிறார்.