Denmark Open Saina Srikanth Pranai advanced to quarter finals
டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால் மற்றும் தாய்லாந்தின் நிட்சாவ்ன் ஜின்டாபோல் மோதினர்.
இதில், 22-20, 21-13 என்ற செட் கணக்கில் நிட்சாவ்ன் ஜின்டாபோலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் சாய்னா நெவால்.
சாய்னா தனது காலிறுதிச் சுற்றில் ஜப்பானின் அகானே யமாகுசியை சந்திக்கிறார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் தென் கொரியாவின் ஜியோன் ஹியோக் ஜின் மோதினர்.
இதில், 21-13, 8-21, 21-18 என்ற செட் கணக்கில் ஜியோன் ஹியோக் ஜின்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்.
ஸ்ரீகாந்த் தந்து காலிறுதியில் நடப்பு உலக சாம்பியனான டென்மார்க்கின் விக்டர் அக்ஸல்சனை எதிர்கொள்கிறார்.
மற்றொரு சுற்றில் ஒலிம்பிக்கில் மூன்று முறை வெள்ளி வென்ற மலேசியாவின் லீ சோங் வெயை 21-17, 11-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய்.
பிரணாய் தனது அடுத்த சுற்றில் தென் கொரியாவின் சன் வான் ஹோவை சந்திக்கிறார்.
