Denmark Open India Saina Srikanth and Pranaye advanced to the next round

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர். ஆனால், வெள்ளி மங்கையான பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனும், ஸ்பெயின் வீராங்கனையுமான கரோலினா மரினை எதிர்கொண்டார் சாய்னா நெவால்.

இருவருக்கும் இடையே 43 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் சாய்னா 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று அசத்தினார்

இதனிடையே, மற்றொரு முதல் சுற்றில் பி.வி.சிந்து, முதல் சுற்றில் சீனாவின் சென் யுஃபெயிடம் 17-21, 21-23 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.

சிந்து முதல் சுற்றில் தோற்று வெளியேறுவது இது 2-வது முறையாகும். முன்னதாக, ஜப்பான் ஓபன் போட்டியிலும் அவர் இதேபோல் தோல்வி கண்டிருந்தார்.

அதேபோன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுகளில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹெச்.எஸ்.பிரணாய் வெற்றி பெற்றனர். இதில் ஸ்ரீகாந்த் 21-17, 21-15 என்ற செட் கணக்கில் சக இந்தியரான சுபாங்கரை வென்றார்.

இதேபோல், டென்மார்க்கின் எமில் ஹோல்ஸ்டை 21-18, 21-19 என்ற செட் கணக்கில் வென்றார் பிரணாய்.