Denmark Open Climax Winning Srikanth Champion in India

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வாகை சூடினார்.

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் நடைப்பெற்றது.

இதன் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த மற்றும் தென் கொரியாவின் லீ ஹியூன் மோதினர்.

இதில், 21-10, 21-5 என்ற செட் கணக்கில் லீ ஹியூனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்.

நடப்பாண்டில் ஸ்ரீகாந்த் வெல்லும் 3-வது சூப்பர் சீரிஸ் பட்டம் இது, ஒட்டுமொத்தமாக 5-வது பட்டமாகும்.

வெற்றிக் குறித்து ஸ்ரீகாந்த் பேசியது:

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் வென்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இது எனது மூன்றாவது சூப்பர் சீரிஸ் பட்டமாகும். அதை நினைக்கும்போது வெளிப்படும் மகிழ்ச்சியை கூற வார்த்தையே இல்லை. இனி வரும் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றிப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.