defeat the current champion and win the next round of the tournament ...

பிரெஞ்ச் ஓபன் முதல் சுற்றில் நடப்புச் சாம்பியனான ஜெலனா ஓஸபென்கோ வீழ்த்தி கட்ரினா கோஸ்லோ அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இரண்டாவதான பிரெஞ்ச் ஓபன் பாரிஸ் ரோலண்ட் காரோஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 

இதில் நடப்புச் சாம்பியன் ஓஸபென்கோவோ மற்றும் உக்ரைனின் கட்ரினா கோஸ்லோவுடன் மோதினர். இதில், 7-5, 6-3 என்ற நேர் செட்களில் கட்ரினா கோஸ்லோவிடம் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார் ஓஸபென்கோவோ.

அதேபோன்று, மகளிர் பிரிவில் பெட்ரோ விட்டோவா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். 

ஆனால், முன்னாள் முதல்நிலை வீராங்கனை விக்டோரியா அஸரென்கா முதல்சுற்றோடு வெளியேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் நிலை வீரர் அலெக்சாண்டர் வெரேவ் 6-1, 6-1, 6-2 என்ற நேர் செட்களில் லிதுவேனியாவின் ரிகார்டஸை வீழ்த்தினார். 

அதேபோன்று, 4-ஆம் நிலை வீரர் கிரிகோர் டிமிட்ரோவ் எதிர் தரப்பு வீரர் விக்டோர் டிரோய்கி காயம் காரணமாக வெளியேறியதால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

ஆனால், முன்னாள் முதல்நிலை வீரர் ஜோகோவிச் 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பிரேசிலின் ரோகெரியா சில்வாவை வீழ்த்தி 2-ஆம் சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் பிரிவில் முன்னாள் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்கா 6-2, 3-6, 4-6, 7-6, 6-3 என்ற ஐந்து செட்களில் ஸ்பெயின் வீரர் சூசேன் லெங்கலனிடம் தோல்வியுற்று வெளியேறினார்.