ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவிற்கு 2ஆவது தங்கம்! தீபிகா பல்லிக்கல், ஹரிந்தர் பால் சந்து அசத்தல் வெற்றி!
ஆசிய விளையாட்டின் தற்போது நடந்து முடிந்த ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் மற்றும் ஹரிந்தர் பால் சந்து வெற்றி பெற்று தங்கப் பதக்கம் கைப்பற்றினர்.
சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில், இன்று காலை நடந்த பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் மற்றும் ஹரிந்தர் பால் சந்து ஜோடி தங்கம் வென்றுள்ளது. மலேசியாவிற்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் 2-0 என்ற கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா 2ஆவது தங்கம் கைப்பற்றியுள்ளது.
CWC 2023: கிரிக்கெட் உலகக் கோப்பையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் கிரேட் காளி!
இதற்கு முன்னதாக ஸ்வாகுஷ் பிரிவில் போட்டியிட்ட ஆண்கள் அணி பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது. இதே போன்று பெண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்றது. தற்போது வரையில் இந்தியா 20 தங்கம், 31 வெள்ளி மற்றும் 32 வெண்கலம் கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 83 பதக்கங்களுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், 100 பதக்கங்கள் கைப்பற்றி இந்தியா நாடு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
England vs New Zealand 1st Match: பென் ஸ்டோக்ஸ் விலகல்? யாரை களமிறக்க போகிறது இங்கிலாந்து?