இந்தியாவில் ஐபிஎல்லைப்போல தென்னாப்பிரிக்காவில் மசான்ஸி சூப்பர் லீக் என்ற பெயரில் டி20 லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் டிவில்லியர்ஸ் தலைமையிலான டிஷ்வானே ஸ்பார்டான்ஸ் மற்றும் கேப்டவுன் பிளிட்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஸ்பார்டன்ஸ் அணி கேப்டன் டிவில்லியர்ஸ், பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து கேப்டவுன் பிளிட்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் கைல் வெரெய்னே மற்றும் முகமது நவாஸ் ஆகியோரின் அபாரமான அரைசதத்தால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை குவித்தது. 

இதையடுத்து 181 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்பார்டான்ஸ் அணியில் டிவில்லியர்ஸ் மட்டுமே சிறப்பாக ஆடினார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ் 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 59 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஸ்பார்டான்ஸ் அணி 19.3 ஓவரில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதையடுத்து கேப்டவுன் பிளிட்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.